கனடாவின் எண்ணெய் வளமிக்க மாகாணமான ஆல்பர்ட்டா அந்நாட்டில் இருந்து பிரிந்துச் செல்வது குறித்து ஆல்பர்ட்டா மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் நேற்று காலை வெளியாகியுள்ளன. இதுவரை எண்ணப்பட்ட 15 லட்சம் வாக்குகளில் சுமார் 76 சதவிகித மக்கள் ஆல்பர்ட்டா கனடா உடன் இணைந்திருக்க வேண்டுமெனவும், 24 சதவிகித மக்கள் பிரிந்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் வாக்களித்துள்ளனர்.
இதுபற்றி, கனடா பிரிதமர் மார்க் கார்னி கூறுகையில், “ஆல்பர்ட்டா மக்கள் தெளிவான முடிவை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் ஒற்றுமையையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியையும், ஒருவரையொருவர் கவனித்துகொள்வதையும் தேர்ந்தெடுத்துள்ளனர். அதைவிட மேலாக, ஆல்பர்ட்டா மக்கள் கனடாவை தேர்ந்தெடுத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்கா உடன் இணைக்க வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறார். இத்தகையச் சூழலில், இந்த வாக்கெடுப்பு கனடாவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.